கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்!பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..
கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது. சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.குறித்த சம்பவத்தின் பின்னணி...
கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்
களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் செல்கின்றார்.
செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர்.
"எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார்.
அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது. "இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார்.
கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார்.

அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர். கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர்.
மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர்.
முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு
அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை. பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர்.
தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.

சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார்.
ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.
காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணை வழங்குகின்றனர்.அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்கின்றனர்.
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...