கொழும்பில் இசை நிகழ்ச்சியில் கொலை செய்யப்பட்ட இளைஞன்
கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாரால் 17 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் நால்வரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்ய தேடப்படும் நபர்களில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மருமகனும் அடங்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அருகில் உள்ள கண்கானிப்பு கமராக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த தாக்குதல் நடக்கும் விதத்தை கண்டறிய முடிந்தது.
உயிரிழந்த இளம் வர்த்தகர் சந்தேகநபரின் 17 வயது முன்னாள் காதலியுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் காதலி வேறு ஒருவருடன் வந்து தாக்குதல் நடத்தியதால் சந்தேக நபர் கோபமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri