யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதல்

மகிழடித்தீவை சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று காலை 7 மணியளவில் தனது வீட்டில் இருந்து தாந்தாமலை பகுதியிலுள்ள அடைச்சல் களப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை அவரைத் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam