கொழும்பில் வாடகைக்கு குடியிருக்க வந்த நபரின் இரக்கமற்ற செயல்.. ஆயுதத்தை வீசிவிட்டு தப்பியோட்டம்
பத்தரமுல்லை - அக்குறுகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், 72 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.
இறந்தவரின் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்ததாகவும் அந்த வாடகை வீட்டில் முன்பு வசித்த ஒருவரே குறித்த படுகொலையை செய்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
நிதி தகராறு
கொலையைச் செய்த நபர் இன்று (12) காலை 7 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்து, அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் ஒருவரைப் பார்த்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சந்தேகநபர் உயிரிழந்தவரை கொலை செய்ய பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவருக்கும் இடையேயான நிதி தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri