விசேட அதிரடிப்படையின் ஜீப்வண்டி மோதியதில் முதியவர் உயிரிழப்பு - சாரதி கைது
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் விசேட அதிரடிப்படை சாரதி நேற்று முன்தினம்(13) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு சம்பவ தினமான சனிக்கிழமை இரவு ஜீப் வண்டி பிரயாணித்துக் கொண்டிருந்தபோது பிரித்திச்சேனை சந்தியில் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் விசே அதிரடிப்படையின் ஜீப் வண்டியை செலுத்திய சாரதியை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri