யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(29) மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவரை கீழே தள்ளி விழுத்தி விட்டு வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
