யாழில் எருமைகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் பரிதாப மரணம்
எருமை மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
மூன்று முறிப்பு, நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சையளிப்பு
கடந்த 27ஆம் திகதி உறவினரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.

இதன்போது அறுகம்குளம் பகுதியில் கூட்டமாக சென்ற எருமைகளுடன் மோதி விபத்தில் சிக்கினார். பின்னர் அவரை நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
 
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
    நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        