மட்டக்களப்பில் மீன் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் மீன் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது மட்டக்களப்பு- கொழும்பு வீதியின் புனாணை 126 மையல் கல் பகுதியில் நேற்று (31.1.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழப்பு
இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிதென்னையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவர் இஸ்தலத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri