அம்பாறையில் மாடு மேய்க்கச் சென்ற நபருக்கு நேர்ந்த அவலம்!
அம்பாறை- உகன, மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகாகண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலகே உபசேன ரத்நாயக்க (வயது 44) என்பவரே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
இவர் நேற்றையதினம்(10.11.2026) மாலை பசுக்களுடன் வனப்பகுதியிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்ற வேளை திடீரென எதிர்ப்பட்ட காட்டு யானை அவரைத் தீவிரமாகத் தாக்கியுள்ளது.
தீவிர விசாரணை
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள குழுவினரும் இச்சம்பவம் தொடர்பில் கள ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.