ஜேர்மனியில் பொது மக்கள் மீது மோதிய கார் - 14 சிறுவர்கள் படுகாயம், ஒருவர் பலி
ஜேர்மனியில் பொது மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த பெர்லின் வீதியில் மக்கள் கூட்டத்தின் மீது கார் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதி ஒரு ஜேர்மன்-ஆர்மேனிய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர், குறித்த நபரின் வாகனம் இறுதியில் கடை ஒன்றின் கண்ணாடியில் மோதிய நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை அருகில் இருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா?
எவ்வாறாயினும், இது விபத்தா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் இன்னும் அனைத்தையும் தெளிவுபடுத்தவில்லை," என்று பெர்லின் மேயர் ஃபிரான்சிஸ்கா சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி ஊகிக்க விசாரணைகள் ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முன்பு பெர்லினில் ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் கூறினார்.
மேற்கு பெர்லினில் 2016 கிறிஸ்மஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.