எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு
அம்பாறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை - பொத்துவிலில் பகுதியிலேயே இன்று(23) காலை 11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையில்
உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர் பொத்துவில் - லகுகலையை சேர்ந்த 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெறுவதற்காக இன்றையதினம் காலையில் இருந்து காத்திருந்த உத்தியோகத்தர் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் எனவும், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மது போதையில் பயணித்த பயணி தாக்கியதில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பலி:கொழும்பு - யாழ் ரயிலில் சம்பவம் |