அவிசாவளை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் பலி
கேகாலை - அவிசாவளை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் நேற்று(23.01.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து
கேகாலை திசையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, இருவர் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.