கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 8ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி கூரை வேய்வதற்கு சென்றுள்ளார்.
இதன்போது தவறுதலாக கூரையில் இருந்து விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் அன்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
