பொலன்னறுவையில் யானை தாக்கி ஒருவர் பலி!
பொலன்னறுவை- மெதிரிகிரியை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது, மெதிரிகிரியை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய விவசாயி ஒருவர், இன்று காலை தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென அவரைத் தாக்கியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
எச்சரிக்கை
யானையின் தாக்குதலினால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மெதிரிகிரியை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam