காதல் விவகாரம்: தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு
அம்பாறை-கல்முனையில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
காதல் விவகாரமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன் மூச்சுக் குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan