யானை தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (08.11.2024) ஆம் திகதி காலை காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றையதினம் (17) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பு
குறித்த நபர் ஒட்டுசுட்டான் இத்திமடு வீதியில் வயல் காவலுக்காக மிதிவண்டியில் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், சம்மளங்குளம் பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய இரத்தினசிங்கம் மகேந்திரராசா (வெள்ளை)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
