லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!
மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில்
மொனராகலை நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றும், அதற்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் லிதேகடை சந்திப் பகுதியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மீட்கப்பட்டு சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri