எரிபொருள் பெற காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு
மத்துகம - பெலவத்த பகுதியில் எரிபொருள் பெற காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருளைப் பெற்றுக் கொள்ள காத்திருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசல் நிலையின்போது இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் வலல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுடன் இலங்கை வந்துள்ள கப்பல்
| இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்! அமைச்சர் தகவல் |
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

வந்தடைந்த எரிபொருட்களுக்கான தரபரிசோதனை எடுக்கப்பட்டதன் பின் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த எரிபொருள் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.