புல்லறுக்க சென்ற நபர் குளவி கொட்டுக்கு இலக்காகி பரிதாப மரணம்
கால்நடைக்கு புல்லறுக்க சென்ற நபர் ஒருவர் குளவி கொட்டுக்கிலக்காகி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று பொகவந்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (26.10.2025) பகல் 12 மணியளவில் எல்டப்ஸ் பகுதியில் உள்ள 06ஆம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கால்நடைகளுக்கு தனது மனைவியுடன் புல்லறுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென குளிவி கூடு களைந்து சரிமாரியாக தாக்கியுள்ளது.
பிரேத பரிசோதனை
அதனை தொடர்ந்து குறித்த குடும்பஸ்த்தர் பொகவந்தலா வைத்தியசாலைக்கொண்டு செல்லும் போது இடையிலே மரணித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடைய கருப்பணன் குண்டு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam