வெளிநாட்டுக் கைத்துப்பாக்கியுடன் மட்டக்குளியில் ஒருவர் சிக்கினார்
வெளிநாட்டுக் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமித்புர பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்
கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டுக் கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 12 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri