பெருமளவிலான பீடி இலைகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது
புத்தளம் - காரைத்தீவு பகுதியில் பெருமளவான பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி விஜய கடற்படையினர் இன்று அதிகாலை(02.07.2023) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 50 வயது மதிக்கத்தக்க குறித்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்
65 உரைகளில் சுமார் 1947 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது எனவும் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.