முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பழிதீர்க்கப்படுவதற்கு காரணமாக இருந்த, சீக்கிய பொற்கோயிலுக்குள் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்
இந்திய பஞ்சாப்பில் அமைந்துள்ள சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் அத்துமீறி பிரவேசித்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளது.
கோயிலில் பிரார்த்தனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சீக்கியர்களின் புனித நுாலான “குரு கிரந்த் சாஹிப்” வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பிரவேசித்த இளைஞர், அங்கிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் நேரடியாக அங்கிருந்த தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட நிலையில் பிரார்த்னையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இதனையடுத்து பொற்கோயில் நிர்வாகத்தினர் அவரை தமது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போது புனித நுால் வைக்கப்பட்டிருந்த கருவறைக்குள் பிரவேசித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். இதனையடுத்தே அவர் மரணமானார்.
இதேவேளை வரலாற்றில், சீக்கியர்களின் பொற்கோயிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய படையினர் 1984ஆம் ஆண்டு “ஒப்பரேசன் புளு ஸ்டார்” என்ற தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு சீக்கிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து பொற்கோயிலுக்குள் இந்திய படையினர் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஆணை வழங்கிய, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி சீக்கிய மெய்பாதுகாவலரால் இதற்கு பழித்தீர்க்கும் வகையில் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




