கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று(22.03.2024) மாலை கைது செய்துள்ளனர்.
இதன் போது கிளிநொச்சியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த நடவடிக்கையின் போது உருத்திபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் அவரிடமிருந்த நான்கு கேரள கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கைது செய்யப்பட்ட அவரிடமிருந்த இரண்டு மில்லியன் பெறுமதியான 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
