முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு விற்பனை செய்த நபர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14.02.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10 வட்டாரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டுசுட்டான் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதற்கமைய, இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரிகள், 25 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்பு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்னால் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
