யாழில் சட்டவிரோதமாக பலகைகளை கடத்த முற்பட்ட ஒருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த 26 வயதையுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கொலனி பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்பட்டு பலகையாக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் முதிரை,பாலை மரங்கள் அறுக்கப்பட்ட நிலையில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
