வடக்கில் இருவேரு பகுதிகளில் போதைப்பொருளுடன் மூவர் கைது (Photos)
கிளிநொச்சியில் போதைபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் நேற்று (08.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள்
இந்த கைது நடவடிக்கையின் போது, சிறுபொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயின், ஊசி மருந்துகள், மருத்து வில்லைகள் 720 மற்றும் 20 லீட்டர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உழவனுர் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
நெடுந்தீவுக்கடலில்....
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கேரள கஞ்சா நெடுந்தீவுக் கடலில் கைப்பற்றப்பட்டது.
இன்று (09.11.2022) அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பற்றப்பட்டது.
நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றியதுடன், கஞ்சாவை எடுத்து வந்த இரு படகோட்டிகளையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்டைதீவைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்தி:தீபன், கஜிந்தன்






