திருகோணமலையில் கசிப்பு கோடாவுடன் ஒருவரை கைது
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் கசிப்பு கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சம்புக்களி கடற்கரை சேனை வட்டாரம் ஒன்றில் வசித்து கசிப்பு உற்பத்தி செய்யும் 42 வயதுடையவர் என சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது, கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரத்து 75 மில்லி லிட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு பெரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்கரைச் சேனை பிரதேசத்தில் தொடர்ந்து கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கோடாவையும் கைது செய்யப்பட்ட நபரையும் நேற்று (30) மூதூர் நீதிமன்ற நீதிபதி எம்.எச் தஸ்னீம் பெளசானிடம் முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேக நபரை சரீர பிணையில் செல்ல அனுமதித்தவுடன் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வழக்கு ஒத்தி வைக்க சம்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |