கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி கைது
கொழும்பு - இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(28.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயது நபர் கைது
சீதவாக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam