கொழும்பில் கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள், தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மற்றைய மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் பரிதாபமாக பலி
நேற்று முன்தினம் காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், மகரகம மத்திய மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த, பிலியந்தலை நிவன்திட்டிய பகுதியை சேர்ந்த இசல தஹம் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது நண்பர் விபத்தில் பலத்த காயமடைந்து களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாய் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், தஹம் தனது நண்பருடன் மகுளுதூவ பகுதியில் இருந்து அரவ்வல நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன்போது அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
வீதி விபத்து
அதன் பின்னர் வீதியை விட்டு விலகி, அங்கிருந்த தொலைபேசி கம்பமொன்றிலும் பலமாக மோதி நின்றுள்ளது.

விபத்தின் பின்னர் தஹம் மற்றும் அவரது நண்பனை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், தஹம் உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, 400,000 ரூபா பணத்திற்கு பாகங்கள் பிரிக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரம் மற்றும் மேலும் சில பாகங்கள் உடைந்து தனியாக பிரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam