திருகோணமலையில் இரகசிய தகவலின் அடிப்படையில் வசமாக சிக்கிய நபர்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுனாமி வீட்டுதிட்டத்தில வசிக்கும் சந்தேகநபர்
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா தாயிப் நகர், நடுவூற்று சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் இருந்து 7.41 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் அவரை திருவண்ணாமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
