16 வாய் வெடிகளுடன் ஒருவர் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் ஹக்கபடஸ் என்றழைக்கப்படும் 16 வாய் வெடிகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பிரதேசத்தில் அண்மைக்காலமாக யானைகள் உயிரிழந்து வருவதுடன், மிருகங்களை வேட்டையாடும் வீதமும் அதிகரித்து வந்தது.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலாலின் (Vasantha Chanralal) அறிவுறுத்தலின் பேரில் பன்குளம் பிரதேசத்தில் சில இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் குறித்த பகுதியால் சென்ற சந்தேகநபர் ஒருவரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 16 வாய் வெடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 35 வயது உடையவர் எனவும் குறித்த நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
