யாழில் பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்றவர் கைது
வட்டுக்கோட்டையில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(27) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது நடவடிக்கை
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam