யாழ்.சாவகச்சேரியில் அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி வந்த ஒருவர் கைது
யாழ்.சாவகச்சேரியில் அனுமதிப்பத்திரம் இன்றி பாரவூர்தியில் மரக்குற்றிகளை ஏற்றி வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(21) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதடி பகுதியில் இன்று காலை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் சிறிய ரக பாரவூர்தியை மறித்து சோதனை மேற்கொண்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி விறகு ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.
சாரதி கைது
அதனை தொடர்ந்து பாரவூர்தியை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சோதனை மோற்கொண்டதில் விறகுக்குள் மறைத்து பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாளையதினம்(22) அவரை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 17 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam