பிரித்தானியாவில் மற்றுமொரு இந்து கோவில் முற்றுகை - ஆயுதம் வைத்திருந்த ஒருவர் கைது
பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் நகரில் உள்ள துர்கா பவன் கோவில் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் துபாயில் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து லீசெஸ்டர்ஷையர் இந்து - முஸ்லிம்கள் இடையே வன்முறை வெடித்தது.
Look at this ?
— Wasiq Wasiq (@WasiqUK) September 20, 2022
First Leicester, now Smethwick. Where next?
Around 200 people marching towards the Durga Bhawan Hindu Centre.
It is clearly intimidating and frightening for local Hindus.
The security services need to crackdown on these anti-Hindu thugs. pic.twitter.com/okafSjDsaR
இந்திய தூதரகம் கண்டனம்
இதன் போது லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் இருந்த கொடி கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் 47 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
Any other group acting like this, would see cops in riot gear out - why are @leicspolice taking such a soft line with these thugs?#Leicester
— Steve in London ?? (@LordCLQTR) September 18, 2022
pic.twitter.com/0Q8CPwBWs8
இந்நிலையிலேயே, செவ்வாய்கிழமை மாலை வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் நகரில் உள்ள துர்கா பவன் கோயிலுக்கு வெளியே சுமார் 200 பேர் வரையில் ஒன்று கூடி குறித்த ஆலயத்தை முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதான நபர் ஒருவர் கைது
இந்து கலாசார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மீது திட்டமிடப்பட்ட போராட்டம் குறித்து அறிந்திருப்பதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த ஆலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், உள்ளூர் மற்றும் பிராந்தியம் முழுவதும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் கூறியுள்ளனர்.