வெளிநாட்டு சிறுவர்களை அச்சுறுத்திய நபர் கைது!
காலி, உனவட்டுன சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சிறுவர்களைத் தாக்குவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் சுற்றுலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(02.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
12 மற்றும் 13 வயதுடைய வெளிநாட்டுச் சிறுவர்கள் சிலர் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அவர்கள் தனது வியாபார நிலையத்திற்குத் தடையாக இருப்பதாகக் கூறி சந்தேகநபர் சிறுவர்களைத் தாக்குவதாக மிரட்டியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு விரைந்த உனவட்டுன சுற்றுலா பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan