மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (4) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 528 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri