உள்ளூராட்சித் தேர்தல் விசாரணை தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவு
புதிய இணைப்பு
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமைமீறல் மனுக்களை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த மனு பரிசீலிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பி, மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை கோரினார்.
இந்நிலையில், நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலம் இணைப்பு
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (04.04.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
அதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
