யாழில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளி கோவில் பகுதிக்கு அண்மித்த இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (02.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது 23 சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று (02) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் சுன்னாகம் பொலிஸ் நிலையம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று (03) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்குறித்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விடுமுறை தினமான நேற்று (02.03.2026) சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போத்தல்களுடன் ஒருவர் கைது
விடுமுறை தினத்தில் மதுபானம் விற்க அனுமதி இல்லாத போதும் மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் மிகவும் இரகசியமான முறையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மருதங்கேணி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவரை மதுபான போத்தலுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri