கோட்டாய ஆட்சி போன்று அநுர ஆட்சியிலும் தொடரும் மரணம் - நீண்ட வரிசையில் காத்திருந்தவரின் நிலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நடந்த துயர சம்பவம், சமகால அரசாங்கத்திலும் பதிவாகியுள்ளது.
குருணாகல் பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 44 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற ஒருவர்,நேற்று முன்தினம் மதியம் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் கூறப்படுகிறது.
நீண்ட வரிசை
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில், எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோனகம கூட்டுறவு பெட்ரோல் நிலையத்திற்கும் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில், பெட்ரோல் நிலையத்தில் நீண்ட வரிசை இருந்தது, மேலும் அவர் தனது மோட்டார் சைக்கிளுடன் வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
பிரேத பரிசோதனை
உடனடியாக அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது மரணத்திற்கான காரணம் திடீர் மாரடைப்பு என்று தெரியவந்தது.
கடந்த கோட்டபாய ராஜபக்ச ஆட்சியின் போது எரிபொருள் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam