பாரியளவு பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
சுமார் ஐம்பது கோடி ரூபா சந்தைப் பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டான, கிரியுல்ல வீதியின் சமுர்த்தி மாவத்தை பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் சுற்றிவளைப்பு
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் அப்பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது 21 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஐம்பது கோடி ரூபா அளவில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.