யாழில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய நகைகளை திருடியவர் கைது!
யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய நகைகளும், வெளிநாட்டுப் பணமும் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகை வெளிநாட்டுப் பணமும், நகையும் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
கைது
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும்பண்டார தலமையிலான குழுவினர், நேற்றைய தினம் பிரதான சந்தேகநபரைக் கைது செய்தனர்.
அத்துடன், அவரிடம் இருந்து பெருமளவு நகைகளையும், வெளிநாட்டு நாணயங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை கள் இடம்பெற்று வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக் கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
