பிரபல விவசாய நிறுவனம் என்று கூறி மோசடி செய்த நபர் கைது
இலங்கையின் பிரபல விவசாய நிறுவனம் என கூறிக்கொண்டு காலாவதியான சோளம் விதைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை (20 )இடம்பெற்றுள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கஹடகஸ்திகிலிய- லைட் வீதியில் வசித்துவரும் 32 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஏற்கனவே கஹடகஸ்திகிலிய- மற்றும் கெப்பித்திக்கொள்ளாவ பகுதிகளில் இவ்வாறான மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் குறைந்த விலையில் சோளம் விதைகள் விற்கப்பட்டு வருவதாகவும், இதேவேளை காலாவதியான நிலையில் இலங்கையில் முதல் தர விவசாய நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸார் விற்பனை செய்யும் விதை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது இவர் போலியான விதத்தில் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
