மட்டக்களப்பில் போதைபொருள் விற்பனை செய்த நபர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அரபாநகர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (05.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அரபாநகர் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த வீதிவழியாக வியாபாரத்துக்காக ஐஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரியை மடிக்கிபிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 9 கிராமும் 09 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri