வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
வக்பு நியாய சபையில் இடம்பெற்ற விசாரணைகளை ஒலிப்பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஒருவர் மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சபையின் அமர்வு, இன்று (21) அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதியான யூ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை ஒலிப்பதிவு செய்தார் என்னும் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
அவர், அந்த ஒலிப்பதிவினை வட்ஸ்அப் செயலி மூலம் தொழிலதிபர் ஒருவருக்கு அனுப்பியதாக, பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பில் இன்றைய விசாரணைகளுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு விசாரணை அமர்வுகளையும் ஒலிப்பதிவு செய்து குறித்த தொழிலதிபருக்கு அனுப்பியதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தற்போது மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |