மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இதன்போது 570 லீற்றர் கோடா அடங்கிய நான்கு பரல்களுடனும் 30 லீற்றர் வடி சாராயத்துடனும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்ற பொருட்களையும் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடரந்து, காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
