அதிகாலையில் நடந்த விசேட சுற்றிவளைப்பு - சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் அதிரடி கைது
நுவரெலியா - வட்டவளை குயில்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர், நல்லதண்ணீர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(06.09.2026) வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், அதிகாலை சுமார் 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
நல்லதண்ணீர் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, அங்கிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபகரணங்களுடன் ஒருவர் கைது
மேலும், சட்டவிரோத மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் உபகரணங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோத மாணிக்கல் அகழ்வை தடுக்கும் வகையில், எதிர்காலத்திலும் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri