இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்த நபர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்து தங்கிருந்த நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கடந்த 2009 ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் நாகப்பட்டினம் பிரதேசத்தில் வசித்து வந்த அவர் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளதுடன் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
