வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய முகவரை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
கொழும்பில் செயற்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு எதிராக 85 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் நிறுவனத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 256 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.