சமூக வலைத்தளங்கள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
காலியில் (Galle) சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (22) மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
குறித்த நபர், வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கொன்றிலிருந்து நீண்ட காலமாக தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் திஹாகொட பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் இருந்து ஒரு கணினி, 6 கையடக்கத் தொலைபேசிகள், 8 விதமான வங்கி அட்டைகள் மற்றும் சுமார் நாற்பதாயிரம் ரூபாயை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடன் உதவி
மேலும், விசாரணைகளில் சந்தேகநபர் இணையத்தில் கடன் வழங்குவது என்ற போர்வையில் நாடளாவிய ரீதியில் உள்ளவர்களிடம் கடன் சேவைக் கட்டணமாக 3000 முதல் 5000 ரூபா வரை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், கடன் தொகையை வழங்காமல் கடனுதவிக்காக விண்ணப்பித்தவர்களை தவிர்த்து சந்தேக நபர் இந்த மோசடியை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபர் பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலிகளை பயன்படுத்தியுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
