யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த போதைப்பொருளை வாங்க முற்பட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராம நாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிகளும் ஆகியோரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு அந்த இவ்வாறு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.
அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
